கவலைகள் தீர மனம் திறந்து அழுங்கள்...! ஸ்பெயினில் வரவேற்பு பெறும் அழுகை அறை - News View

Breaking

Monday, October 18, 2021

கவலைகள் தீர மனம் திறந்து அழுங்கள்...! ஸ்பெயினில் வரவேற்பு பெறும் அழுகை அறை

சிலருக்கு எப்படிப்பட்ட துன்பம் ஏற்பட்டாலும் அழுகையே வராது. அதேபோல் கடும் மன அழுத்தத்தில் இருப்பவர்களும் எளிதில் அழுதுவிட மாட்டார்கள். அழுகையை அடக்கினால் மன அழுத்தம் மேலும் அதிகமாகும். எனவே, கவலை இருந்தால் கண்ணீர் விட்டு அழுதுவிட வேண்டும். 

இப்படி, கவலை மற்றும் மன நல பிரச்சனை உள்ளவர்கள் அழுவதற்கு என்றே ஸ்பெயின் நாட்டில் தனி அறையை உருவாக்கியிருக்கிறார்கள். 
 
'அழுகை அறைக்கு வரவேற்கிறோம்' என்று வினோதமான வாசகத்துடன் வரவேற்கிறது ஸ்பெயினின் மாட்ரிக் நகரில் அமைந்துள்ள அழுகை அறை. 

மனநல பிரச்சினையால் அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுக்கும் வகையில் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கவலைகள் தீரும் வகையில் மனம் திறந்து அழுவதற்காக இந்த அழுகை அறைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 

இந்த அறையில் உளவியல் மருத்துவர் உட்பட மனச்சோர்வடையும் போது அழைக்கக் கூடிய நபர்களின் பெயர்களுடன் தொலைபேசிகள் உள்ளன. அவர்களைத் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் பெறலாம். 

இந்த அழுகை அறைக்கு வரவேற்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. மனதில் கவலை உள்ளவர்கள் பலர் இந்த அறைக்கு அழுது ஆறுதல் தேடுகின்றனர்.  .

No comments:

Post a Comment