(எம். என் . எம் . அப்ராஸ்)
ஒருவருக்கு பணத்தை கொடுப்பதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியாது அது சமுக, பொருளாதார, கலாச்சார, தொழினுட்ப ரீதியான அனைத்து விதமான துறைகளையும் மேம்படுத்துவதன் மூலமே வறுமையை ஒழிக்கமுடியும் என அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ் தெரிவித்தார்.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கத்தின் பிராந்திய கணக்காய்வு அலகு அலுவலகம் கல்முனை இஸ்லாமாபாத்பகுதியில் (22) திறந்து உத்தியோபூர்வமாக வைக்கப்பட்டது
கல்முனை கணக்காய்வு பிரிவின் பொறுப்பதிகாரி என். தினோசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம். எஸ். எம் .சப்ராஸ் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறுகருத்து தெரிவித்தார் .
மேலும் அவர் அங்கு உரையாயற்றுகையில், தற்போது கொரோனா நிலை காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் மக்களுக்கு மிகவும் அத்தியாசியமான ஓர் திணைக்களமாக சமூர்த்தி திணைக்களம் காணப்படுகிறது .
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கத்தின் பிராந்திய கணக்காய்வு அலகு அலுவலகம் ஒன்று அல்லது ஒன்றுக்குமேற்பட்ட பிரதேச செயலகங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டதாகும்.
கணக்காய்வு அலகு காரியாலயத்தை அமைப்பதன் நோக்கம் பொதுமக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் முகமாக சமுர்த்தி திணைக்களத்தின் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்ற போது வினைத்திறனான முறையில் சேவைகள் கீழ் மட்டத்தில் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்காக ஓர் இடை மத்திய நிலையமாக இவ் காரியாலயம் உள்ளது.
பிராந்திய கணக்காய்வு அலகு அலுவலகத்தின் முக்கிய அம்சங்களாக தரவுகளை சேகரித்து தரவுகளை பகுப்பாய்வு செய்வதுமாகும் .
உள்ளக கணக்காய்வு செய்கின்ற போது அதன் குறைகளை கண்டுபிடிப்பது அல்ல. உள்ளக கணக்காய்வின் முக்கிய நோக்கம் தரத்தை மேம்படுத்துவதாகும் என்றார்.
இதன் போது விசேட அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி அவர்களும் மற்றும் மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்ட கணக்காய்வு உயர் அதிகாரிகள் பிரதேச செயலக மட்ட சமூர்த்திதலைமை பீட முகாமையாளர்கள், முகாமைததுவ பணிப்பாளர்கள், திட்ட முகாமையாளர்கள், வங்கி முகாமையாளர்கள், கல்முனை கணக்காய்வு பிரிவின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment