நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டு போராட்டங்களில் ஈடுபடுவதை ஆசிரியர், அதிபர் தொழிற் சங்கத்தினர் தவிர்க்க வேண்டும் - எஸ்.எம். சந்திரசேன - News View

Breaking

Tuesday, October 5, 2021

நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டு போராட்டங்களில் ஈடுபடுவதை ஆசிரியர், அதிபர் தொழிற் சங்கத்தினர் தவிர்க்க வேண்டும் - எஸ்.எம். சந்திரசேன

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தொற்று பரவல் சடுதியாக குறைவடைந்துள்ள நிலையில் ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கத்தினர் மீண்டும் வீதிக்கிறங்கி போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளமை அவர்களின் அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஆசிரியர், அதிபர் தொழிற் சங்கத்தினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என காணி விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில்மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்மேலும்குறிப்பிடுகையில், ஆசிரியர், அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் அமைச்சரவை மட்டத்தில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுகளை இவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.

குறுகிய அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படும்போது சரியான தீர்வும் தவறானதாகவே தெரியும். நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டு போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்துகிறோம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாஸ நேற்று விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்து மழையில் நனைந்து ஊடக கண்காட்சியை நடத்துகிறார். மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளை எதிர்க்கட்சித் தலைவர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்கியுள்ளது என்றார்.

No comments:

Post a Comment