மஹிந்தவின் இளைய மகனின் காணாமல் போன பூனை கிடைத்தது - News View

Breaking

Sunday, October 3, 2021

மஹிந்தவின் இளைய மகனின் காணாமல் போன பூனை கிடைத்தது

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் ஜனாதிபதியும், இந்நாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான 'சிசீ' என அறியப்படும் ரோஹித்த ராஜபக்ஷவின் வளர்ப்பு பூனை காணாமல் போயிருந்த நிலையில், தற்போது அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனது பூனை மீள கிடைத்து விட்டதாகவும் அது தொடர்பில் தேடிப்பார்த்த அனைவருக்கும் நன்றி எனவும் ரோஹித்த ராஜபக்ஷ தனது இன்ஸ்டர்கிராம் பக்கத்தில் இதனை உறுதி செய்து பதிவொன்றினை இட்டுள்ளார்.

ரோஹித்த ராஜபக்ஷவின் பெத்தகானே வீட்டிலிருந்து குறித்த பூனை காணாமல் போனதாகவும், அதனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு உரிய சன்மானம் வழங்கப்படும் எனவும், ரோஹித்த ராஜபக்ஷ பூனையின் படத்துடன் முகப்புத்தகத்தில் விளம்பரம் செய்திருந்தார்.

இதனையடுத்து இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இவ்வாறான நிலையிலேயே அப்பூனை மீளக் கிடைத்துவிட்டதாக அவர் இன்ஸ்ட்ரகிராமில் பதிவிட்டுள்ளார்.

காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ரோஹித்தவின் குறித்த பூனை 'துர்கிஷ் அங்கோரா' ரகத்தை சேர்ந்தது எனவும் அது சாதாரணமாக 900 டொலர்கள் முதல் 1500 டொலர்கள் பெறுமதி கொண்டது என அறியப்படும் நிலையில், பூனையின் அழகு, நிறம் என்பவற்றை மையப்படுத்தி அந்த ரக பூனைகள் 1800 டொலர்கள் முதல் 3000 டொலர்கள் வரையிலான விலையில் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment