வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு - News View

Breaking

Wednesday, October 6, 2021

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

இவ்வாண்டுக்கான வேதியல் துறையில் சிறந்த ஆராய்ச்சிக்காக 2 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இம்மாதம் 4 ஆம் திகதியிலிருந்து வருகிற 11 ஆம் திகதி வரை அறிவிக்கப்படுகிறது.

அந்த வகையில், 2021 ஆம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து இன்று (06) அறிவிக்கப்பட்டது.

ஜெர்மனியை சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட், அமெரிக்காவை சேர்ந்த டபிள்யூ சி மேக்மில்லன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

வேதியல் துறையில் சிறந்த ஆராய்ச்சிக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment