சீனாவுடன் இலங்கை இல்லையா ? கொழும்பை எச்சரித்த பெய்ஜிங் : துறைமுக நகரில் தனது செயற்பாடு எவ்வாறாக அமையும் என்பதும் வெளிப்பட்டுள்ளது - News View

About Us

About Us

Breaking

Sunday, October 31, 2021

சீனாவுடன் இலங்கை இல்லையா ? கொழும்பை எச்சரித்த பெய்ஜிங் : துறைமுக நகரில் தனது செயற்பாடு எவ்வாறாக அமையும் என்பதும் வெளிப்பட்டுள்ளது

இரு நாட்டு நட்புறவில் பாரியதொரு நெருக்கடியை தோற்றுவிக்கும் வகையில் சேதனைப் பசளை விவகாரத்தை மையப்படுத்தி மக்கள் வங்கியை சீனா கறுப்புப்பட்டியலிட்டது. இந்த நடவடிக்கையானது இலங்கையின் இறையான்மைக்கு பெரும் கலங்கத்தை ஏற்படுத்தும் செயல் என்பதுடன் கொழும்பு மீதான பெய்ஜிங்கின் மேலாதிக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கறுப்புப்பட்டியல் விடயத்தில் ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவே பன்னாட்டு இராஜதந்திரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சேதனப் பசளை விடயத்தில் சீனாவுக்கு எதிராக எந்தளவு விமர்சனங்களும் எதிர்ப்புக்களும் காணப்பட்டதோ அதே அளவிற்கு இந்திய உரம் விடயத்திலும் விமர்சனங்கள் காணப்பட்டன. ஆனால் அவசர தேவையை கருத்தல் கொண்டு இலங்கை இந்தியாவிடமிருந்து திரவ சேதன உரத்தை கொள்வனவு செய்ததது.

மறுபுறம் சீன உரத்தில் தரம் குறித்த சர்ச்சை மற்றும் உள்நாட்டில் எழுந்த எதிர்ப்புகள் என அனைத்தும் சீனாவின் சினத்திற்கு காரணமாகியது. இதன் வெளிப்பாடாகவே மக்கள் வங்கியை சீனா கறுப்புப்பட்டியலிட்டது. மறுபுறம் இலங்கை எமது கட்டுப்பாட்டில் இல்லையா என்றதொரு செய்தியையும் பெய்ஜிங் வெளிப்படுத்தியுள்ளது.

அதே போன்று ஒரு தூதரகத்தில் இந்தளவு பாரியதொரு விடயத்தை செய்ய முடியுமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது. இலங்கை வரலாற்றிலேயே இவ்வாறானதொரு நெருக்கடி நிலைமையை தேசிய வங்கிகள் சந்தித்ததில்லை.

குறிப்பாக கொவிட் தொற்று காரணமாக இலங்கை மாத்திரமல்ல முழு உலகமும் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நிலைகள் அனைத்துமே பாதிக்கப்பட்டு டொலர் பற்றாக்குறை காரணமாக நாடு தள்ளாடுகின்ற நிலைமையில் மக்கள் வங்கியை சீனா கறுப்புப்பட்டியிலிட்டமை அடிமைப்படுத்தும் செயலாகவே குறிப்பிடப்படுகின்றது. சுமார் 60 வருட கால வரலாற்றில் இவ்வாறானதொரு நிலைமை மக்கள் வங்கி எதிர்கொண்டதில்லை.

2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கையில் மிக தீவிரமாக பல திட்டங்களை முன்னெடுத்த சீனா, கூட்டு திட்டங்களை தவிர்த்து முழு அளவில் சீன நிதியில் இலங்கையில் முக்கிய பல திட்டங்களை முன்னெடுத்திருந்தது. இன்னும் பல திட்டங்களை முன்னெடுத்தும் வருகின்றது. இவையும் சீன நிதி திட்டங்ளாகவே உள்ளன. இதனால் இலங்கை சீனாவின் கடனுக்குள் சிக்கியுள்ளது.

இந்த நிலைமையை பயன்படுத்தியே இலங்கை மீது சீனா தனது மென்மை அதிகார (Soft Power) அழுத்தத்தை பிரயோகிக்கின்றது. இந்த நிலைiமை ஆபிரிக்க நாடுகளில் கூடுதலாக காண முடியும்.

எவ்வாறாயினும் உரம் பிரச்சினையிலேயே இந்தளவு பாரதூரமாக சீனா செயற்படுகின்றது என்றால் துறைமுக நகரில் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்தால் எந்தளவு இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

ஏனெனில் துறைமுக நகர் குறித்து ஏற்கனவே கூறப்பட்ட வரி, நிதியியல் மற்றும் நிர்வாகம் போன்றவற்றக்கு தனிச் சட்டம் என்பது இலங்கையின் தேசிய நலன்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பது உரம் விடயத்தில் சீனாவின் செயற்பாடுகள் ஊர்ஜிதம் செய்கின்றன.

இலங்கையின் தேசிய நிபுணர்கள் சீன உரம் தகுதியற்றது என்று உறுதிப்படுத்தியுள்ள நிலையில் அதனை இலங்கை நிராகரித்தும் மூன்றாம் தரப்பிற்கு சீன செல்ல முற்படுவதுடன் ஊடாக எவ்வாறான செய்தியை வெளிப்படுத்தியுள்ளது. மறுபுறம் துறைமுக நகரில் சீனாவின் செயற்பாடு எவ்வாறாக அமையும் என்பதும் வெளிப்பட்டுள்ளது.

அதேபோன்று உலகத்திலேயே சேதனைப் பசளையை பயன்படுத்தும் ஒரே நாடு பூட்டான் ஆகும். அங்கும் சீனா பாதுகாப்பு உடன்பாடுகளில் கைச்சாத்திட்டுள்ளது.

அதேபோன்று மியன்மாரில் சீன திட்டங்கள் மற்றும் தாய்வானுடனான முரண்பாடுகள் என சீனா ஆசியாவில் பல நாடுகளை இலக்கு வைத்து உள்நுழைகின்றது.

இன்று இலங்கையிலும் அவ்வாறானதொரு நலைமையே ஏற்பட்டுள்ளது என்பதே பன்னாட்டு இராஜதந்திரிகளினதும் கணிப்பாடுகின்றது.

(லியோ நிரோஷ தர்ஷன்) கேசரி

No comments:

Post a Comment