மைத்திரி ஆளும் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா? எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா? : விமர்சிப்பவர்கள் தாராளமாக வெளியேறலாம் என்கிறார் ரொஷான் ரணசிங்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 12, 2021

மைத்திரி ஆளும் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா? எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா? : விமர்சிப்பவர்கள் தாராளமாக வெளியேறலாம் என்கிறார் ரொஷான் ரணசிங்க

(இராஜதுரை ஹஷான்)

நாடு இன்று எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், அவரது சகாக்களும் பொறுப்புக்கூற வேண்டும். சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆளும் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா? எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள். அரசாங்கத்தில் இருந்து தாராளமாக வெளியேறலாம். சலூன் கடையின் கதவு திறந்தே உள்ளது என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொலன்னறுவைக்கு செல்வதில் எவ்வித பாதிப்பும் எனக்கு ஏற்படாது. சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா, அல்லது எதிர்க்கட்சியியை பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா, என்ற சந்தேகம் உள்ளது. முன்னெடுக்கப்படும் அரசியல் சூழ்ச்சிகள் தற்போது வெளிவருகிறது. இவ்வாறான செயற்பாட்டை ஆரம்பத்தில் குறிப்பிட்டேன்.

அவருக்கு பொலன்னறுவைக்கு செல்வதற்கு ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அதனை ககுழுக் கூட்டத்தில் குறிப்பிடலாம். இவர் ஜனாதிபதியாக பதவி வகித்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் விவசாயத்துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

நெல் விநியோக சபையில் நட்டத்தை முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment