உலக சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டியில் 6 ஆவது இடத்தை பிடித்தது இலங்கை அணி - News View

Breaking

Tuesday, October 5, 2021

உலக சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டியில் 6 ஆவது இடத்தை பிடித்தது இலங்கை அணி

எம்.எம்.சில்வெஸ்டர்

இத்தாலியில் நடைபெற்று வந்த உலக சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டித் தொடரில் 6 ஆவது இடத்தை இலங்கை சக்கர நாற்காலி டென்னிஸ் அணியினர் பெற்றுக் கொண்டனர்.

மேலும், உலக சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டியில் இலங்கை பெற்ற அதிசிறந்த பெறுபேறாக அமைந்தமை விசேட அம்சமாகும்.

போட்டித் தொடரின் 5 ஆவது மற்றும் 6 ஆவது இடங்களுக்கான போட்டியில் ஜப்பான் அணியை எதிர்த்தாடிய இலங்கை அணி 0 க்கு 0 என்ற செட் அடிப்படையில் தோல்வியடைந்ததன் காரணமாக,6 ஆவது இடத்தைப் பிடித்தது.

இது உலக சக்கர நாற்காலி டென்னிஸ் வரலாற்றில் இலங்கையின் சிறந்த பெறு‍பேறாக பதிவானது.

16 அணிகள் பங்கேற்ற 8 ஆவது உலக சக்கர நாற்காலி டென்னிஸ் தொடரின் முதலாவது சுற்றில் பிரான்ஸ் அணியை எதிர்த்தாடிய இலங்கை 0 க்கு 3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.

இதையடுத்து நடைபெற்ற பெல்ஜியம் அணியுடனான போட்டியில் 2 க்கு 1 என்ற செட் கணக்கிலும், பிரேஸில் அணியுடனான போட்டியை 3 க்கு 0 என்ற செட் கணக்கிலும் இலங்கை அணி வென்றது.

போலந்து அணியுடனான போட்டியில் 0 க்கு 2 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

இதன் பின்னர் நடைபெற்ற 5 ஆவது இடத்துக்கான போட்டியில் இலங்கை ஜப்பானிடம் தோல்வியைத் தழுவி 6 ஆவது இடத்தை பிடித்தது.

இப்போட்டித் தொடரில் பங்கேற்ற இலங்கை அணியின் தலைவராக அண்மையில் நடந்து முடிந்த டோக்கியோ பராலிம்பிக்கின் சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டியில் பங்கேற்றிருந்த இலங்கை இராணுவத்தின் டி.எஸ்.ஆர். தர்மசேன செயற்பட்டதுடன், இந்த அணியில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த எல்.எஸ்.ரணவீர, டி.எம்.காமினி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

No comments:

Post a Comment