சதொச நிறுவனத்திற்கு சொந்தமான வெள்ளைப்பூடு மோசடி தொடர்பில் 55 வயது வர்த்தகர் கைது - News View

Breaking

Wednesday, October 6, 2021

சதொச நிறுவனத்திற்கு சொந்தமான வெள்ளைப்பூடு மோசடி தொடர்பில் 55 வயது வர்த்தகர் கைது

சர்ச்சையை ஏற்படுத்திய லங்கா சதொச நிறுவனத்திற்கு சொந்தமான 54,000 கி.கி. வெள்ளைப்பூடு மோசடி தொடர்பாக அதனை கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்படும் வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

அதற்கமைய, பம்பலப்பிட்டியில் வசிக்கும் 55 வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகளால் இன்று (06) கைது செய்யப்பட்டுளள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சந்தேகநபரை நாளையதினம் (07) வெலிசறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பிலான முறைப்பாடு தொடர்பான விசாரணை, பேலியகொடை விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அதனை தற்போது CID யினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment