லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்துள்ளனர்.
ஷியா முஸ்லிம் குழுக்களான ஹிஸ்புல்லா மற்றும் அதன் ஆதரவாளர்கள் ஆகியோர் கடந்த ஆண்டு நகரத்தின் துறைமுகத்தில் நடந்த மிகப்பெரிய குண்டு வெடிப்பை விசாரித்த நீதிபதிக்கு எதிராக வியாழக்கிழமை திரண்டதால் இந்த துப்பாக்கி சூடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
லெபனான் படைகள் ( Lebanese Forces) பிரிவைச் சேர்ந்த வீரர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
219 பேரைக் கொன்ற பெய்ரூட் துறைமுக வெடிப்பு தொடர்பான விசாரணையை பெரும் பதற்றம் சூழ்ந்துள்ளது.
நீதிபதி பக்கச்சார்பானவர் என்று ஹிஸ்புல்லா மற்றும் அதன் கூட்டாளிகள் கூறுகின்றனர், ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அவரது செயல்பாட்டை ஆதரிக்கின்றன.
வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் நஜிப் மிகடி, வெள்ளிக்கிழமையை ஒரு துக்க நாளாக அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment