வீட்டில் தீப்பிடித்ததில் 2 மாத பச்சிளம் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி - News View

Breaking

Monday, October 18, 2021

வீட்டில் தீப்பிடித்ததில் 2 மாத பச்சிளம் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் வீடு முழுவதிலும் பரவியது.

அதிகாலை நேரம் என்பதால் வீட்டில் இருந்த அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். வீட்டில் தீப்பற்றி எரிவதை உணர்ந்து அவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். ஆனால் அதற்குள் வீட்டின் நாலாபுறமும் தீ சூழ்ந்ததால் அவர்களால் தப்பிக்க முடியாமல் போனது.

இதனால் தீயின் கோரப்பிடியில் சிக்கி 2 பெண்கள் மற்றும் 2 மாத பச்சிளம் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment