மேல் மாகாண எல்லையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மாகாண எல்லை பயணக் கட்டுப்பாட்டை மீறி உரிய அனுமதியின்றி பயணித்த 193 வாகனங்களை பொலிஸாரால் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அத்துடன் பயணக்கட்டுப்பாட்டை மீறி மாகாண எல்லையை மீறிய 437 நபர்களும் இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று (24) மு.ப. 6.00 மணி முதல் இன்று (25) மு.ப. 6.00 மணி வரையான 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய குறித்த நடவடிக்கை தொடர்பில் 81,324 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 13 சோதனைச்சாவடிகளில் நேற்று மேற்கொண்ட சோதனையில் பயணக்கட்டுப்பாடு விதிமீறல் தொடர்பான விபரங்கள்.
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிய சோதனைக்குட்படுத்திய
வாகனங்கள் 514
நபர்கள் 1,379
மேல் மாகாணத்திற்குள் நுழைந்த சோதனைக்குட்படுத்திய
வாகனங்கள் 776
நபர்கள் 1,654
உரிய அனுமதியின்மை காரணமாக திருப்பியனுப்பப்பட்ட
வாகனங்கள் 193
நபர்கள் 437
No comments:
Post a Comment