'You Can Sri Lanka' நிகழ்சி மூலம் முறையான தொழிற்கல்வி வழிகாட்டல் - செப்டெம்பர் 30 www.youthjobs.lk இணையம் அறிமுகம் - News View

About Us

About Us

Breaking

Monday, September 27, 2021

'You Can Sri Lanka' நிகழ்சி மூலம் முறையான தொழிற்கல்வி வழிகாட்டல் - செப்டெம்பர் 30 www.youthjobs.lk இணையம் அறிமுகம்

முறையான தொழிற்கல்விக்கு வழிகாட்டுகின்ற வழிகாட்டி நிகழ்ச்சித் தொடரொன்றை நடாத்துவதற்கு திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் 'YOU CAN SRI LANKA' (உன்னால் முடியும் ஶ்ரீ லங்கா) எனும் பெயரில் செயற்படுத்தப்படுகின்ற நிகழ்ச்சித் தொடரானது வெகுசன ஊடகம், டிஜிடல் தொழில்நுட்ப முறைகள் மற்றும் பிரதேச மட்டத்திலான அறிவுறுத்தல்கள் மூலமாக சமூகமயமாக்கப்பட உள்ளது.

வெற்றிகரமான மற்றும் பயனுள்ள தொழில் கல்வி வாய்ப்புகள் குறித்த சரியான சமூக அணுகுமுறைகள் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இளைஞர் சமுதாயத்தை முறையான தொழிற்கல்வி வாய்ப்புகளை நோக்கி வழிநடத்துவதே இதன் நோக்கமாகும். 

ஜனாதிபதியவர்களின் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதைப் போன்று, தொழிற் சந்தையின் கேள்விக்கு ஏற்றாற் போல் தொழிற் திறனுடன் கூடிய இளம் தொழில் படையணியினை நாட்டினுள் உருவாக்குவதே இதன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.

வெகுசன ஊடகங்களைப் போன்று டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி தொழில் வழிகாட்டி பிரசார நிகழ்ச்சித் தொடரினை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

2021 செப்டெம்பர் 27, 29 மற்றும் 2021 ஒக்டோபர் 01ம் திகதிகளில் முப. 7.00 மணியிலிருந்து மு.ப. 7.30 மணி வரை ஐ தொலைக்காட்சி அலைவரிசையில் தொழில் வழிகாட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாகின்றன. 

2021 ஒக்டோபர் 02ம் திகதி பி.ப. 4.00 மணியிலிருந்து பி.ப. 4.30 மணி வரை சிரச தொலைக்காட்சி அலைவரிசையில் இந்நிகழ்ச்சியினை பார்வையிடலாம்.

2021 ஒக்டோபர் 27 இருந்து 2021 ஒக்டோபர் 03 வரை ஒவ்வொரு நாளும் பி.பி. 7.00 மணியிலிருந்து 8.00 மணிவரை இலக்கு குழுக்களுக்கு மெய்நிகர் நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கும் இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது. 

அதேபோன்று 2021 செப்டெம்பர் 30ம் திகதி புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் அடங்கிய www.youthjobs.lk எனும் இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பிரதேச செயலகங்களில் திறன் மேம்பாட்டு உத்தியோகத்தரின் பங்களிப்புடன் பிரதேச மட்டத்தில் தொழில் வழிகாட்டல் அமர்வுகளும் நடத்தப்படும்.

நிகழ்ச்சித் தொடரில் பாடசாலை மாணவ, மாணவிகள், இளைஞர், யுவதிகள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அரச, தனியார் துறை உத்தியோகத்தர்கள் போன்றோரை அறிவுறுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

வெற்றிகரமான தொழில் கல்வி மற்றும் அவற்றை பெற்றுக்கொள்ளக் கூடிய நிறுவனங்கள் தொடர்பில் அறிவுறுத்தல், தொழில்கல்வியின் பின்னர் தொழில் சந்தையை நோக்கி செல்வதற்கு அவசியமான தகவல்களை சமூகமயமாக்கல், வெற்றிகரமான தொழில் வழிகாட்டிகளைப் பெற்று பயனுள்ள தொழிலொன்றுக்கு பிரவேசிப்பதற்கான முறையான வழிகாட்டல் என்பன இந்நிகழ்ச்சித் தொடரின் மூலம் எதிர்பார்க்கபடுகின்ற இலக்குகளாகும்.

கல்வி அமைச்சின் பங்களிப்புடன் திறன்கள் அபிவிருத்தி, தொழில்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சினால் செயற்படுத்தப்படுகின்ற இந்நிகழ்ச்சி தொடருடன் தேசிய கல்வியல் நிறுவகம், மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு மற்றும் 'You Lead' திட்டமும் இணைந்து செயற்படுகின்றன.

No comments:

Post a Comment