SARS, MARS வைரஸ் ஆய்வு தொடர்பில் 'Future Science Prize' சீன விருது வென்ற பேராசிரியர் மலிக் பீரிஸ் - ஒரு மில்லியன் டொலர் பணப்பரிசும் பகிர்ந்தளிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, September 13, 2021

SARS, MARS வைரஸ் ஆய்வு தொடர்பில் 'Future Science Prize' சீன விருது வென்ற பேராசிரியர் மலிக் பீரிஸ் - ஒரு மில்லியன் டொலர் பணப்பரிசும் பகிர்ந்தளிப்பு

பேராசிரியர் மலிக் பீரிஸ் சீனாவின் 'Future Science Prize' விருதை வென்றுள்ளார்.

SARS, MERS தொடர்பான ஆராய்ச்சிக்காக, 2021 'Future Science Prize' விருது அவருக்கு வழங்கப்படுவதாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

பேராசிரியர்களான மலிக் பீரிஸ் மற்றும் Yuen Kwok-yung ஆகியோர் இணைந்து இவ்விருதை வென்றுள்ளதாக, தூதரகம் விடுத்துள்ள ட்விற்றர் இடுகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒரு மில்லியன் டொலர் பரிசும் அவர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் விஞ்ஞான ஆய்வுகள், புத்தாக்கம் தொடர்பில் ஊக்குவிக்கும் பொருட்டு கடந்த 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட தனியார் அறக்கட்டளையே 'Future Science Prize' விருதாகும்.

இந்த விருது வழங்கும் விழா நவம்பர் 21 ஆம் திகதி பீஜிங்கில் நடைபெறும்.

பேராசிரியர் மலிக் பீரிஸ் ஒரு இலங்கை நோயியல் நிபுணர் மற்றும் வைராலஜிஸ்ட் ஆவார். 

அவரது ஆராய்ச்சி ஆர்வங்களில் சுற்றுச் சூழல், பரிணாமம், நோய்க் கிருமி உருவாக்கம், விலங்கு - மனித இன்ஃப்ளூயன்ஸா மற்றும் பிற மனித சுவாச வைரஸ் தொற்றுகள், 320 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி வெளியீடுகள் உள்ளன.

No comments:

Post a Comment