வாதுவை, வேரகம பகுதியில் அமைந்துள்ள இரண்டு மாடி வீட்டில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேரகம, அல்விஸ் தோட்டத்தில் அமைந்துள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்திலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
தீ விபத்தின்போது பெற்றோர் வீட்டில் இல்லை என்றும், வீட்டில் இணைய வழிக் கல்வியை முன்னெடுத்த 14 மற்றும் 11 வயதுடைய இரு சிறுமிகளை பிரதேச வாதிகள் பாதுகாப்பாக மீட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
வாதுவை பொலிஸாருக்கு பிரேதசவாதிகள் அறிவித்ததையடுத்து, களுத்துறை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிக்கு விரைந்து அனுப்பப்பட்டன.
இந்த தீவிபத்தில் வீட்டின் மேல் தளம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
No comments:
Post a Comment