உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு - மர்ம சுழல்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்‌ஷணவும் இணைப்பு - News View

Breaking

Sunday, September 12, 2021

உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு - மர்ம சுழல்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்‌ஷணவும் இணைப்பு

ICC T20 உலகக்கிண்ணம் 2021 இற்கான இலங்கை அணி விபரத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவினால் குறித்த அணி அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக, இன்றையதினம் (12) இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

தசுன் சானக்க தலைமையிலான 15 பேர் கொண்ட குறித்த குழாமில், தென்னாபிரிக்க அணியுடனான கடந்த ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியில் அறிமுகமாகி 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய இலங்கையின் மர்ம சுழல்பந்து வீச்சாளர் (Mystery Spinner) என அழைக்கப்படும் 21 வயதான மஹீஷ் தீக்‌ஷணவும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ள 4 வீரர்களில் சுழல் பந்துவீச்சாளரான அகில தனஞ்சய இடம்பிடித்துள்ளார்.

கொவிட்-19 தொற்று காரணமாக கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் திட்டமிடப்பட்டிருந்த 7ஆவது ICC ரி20 உலகக் கிண்ணமானது எதிர்வரும் ஒக்டோபர் 17 - நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ளது.

கொவிட்-19 உயிர்க்குமிழி விதி மீறல் தொடர்பில் ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ள நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக ஆகியோர் தவிர்ந்த முக்கிய வீரர்கள் எவரும் அணியில் புறக்கணிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

16 அணிகள் பங்கேற்கும் குறித்த உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், குறிப்பிட்ட காலக்கெடுவில் தரப்படுத்தலில் முதல் 10 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாகவும், ஏனைய 6 அணிகளும் ரி20 உலக்கிண்ண தகுதிகாண் போட்டிகளின் மூலமும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

அணி விபரம்
தசுன் சானக்க - தலைவர்
தனஞ்சய டி சில்வா - பிரதித் தலைவர்
குசல் ஜனித் பெரேரா
தினேஷ் சந்திமால்
அவிஷ்க பெனாண்டோ
பானுக ராஜபக்‌ஷ
சரித் அசலங்க
வணிந்து ஹசரங்க
கமிந்து மெண்டிஸ்
சாமிக கருணாரத்ன
நுவன் பிரதீப்
துஷ்மந்த சமீர
பிரவீன் ஜயவிக்ரம
லஹிரு மதுஷங்க
மஹீஷ் தீக்‌ஷண

மேலதிக வீரர்கள்
லஹிரு குமார
பினுர பெனாண்டோ
அகில தனஞ்சய
புலின தரங்க

No comments:

Post a Comment