கற்பிட்டி நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் திருடிய பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 15, 2021

கற்பிட்டி நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் திருடிய பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது

கற்பிட்டி நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தில் பெயின்ட் உள்ளிட்ட சில பொருட்களை திருடிச் சென்ற குற்றச்சட்டில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் கீழ் கற்பிட்டி நுரைச்சோலையில் இயங்கும் லக்விஜய அனல் மின் நிலையத்தின் பாதுகாப்பு பிரிவில் தொடர்ச்சியாக கடமையாற்றி வந்த கினிகத்தேன பகுதியைச் சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பாதுகாப்பு அதிகாரி பயணித்த வாகனம் கரம்பையிலுள்ள பொலிஸ் மற்றும் கடற்படையினர் இணைந்து நடத்தும் சோதனைச் சாவடியில் நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அந்த வாகனத்தில் லக்விஜய அனல் மின் நிலையத்திற்கு சொந்தமானது எனக் கூறப்படும் பெயின்ட் மற்றும் வாகனப்பட்டிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் கூறினர்.

பாதுகாப்பு உத்தியோகத்தரால் திருடிச் செல்லப்பட்டதாக் கூறப்படும் பெயின்ட் உள்ளிட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 30 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமானவை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment