வர்த்தக பொருளாதார செயற்பாடுகளை மேம்படுத்த அரசாங்க முதலீடுகளை அதிகரிப்பதற்கு தீர்மானம் என்கிறார் நிதியமைச்சின் செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 21, 2021

வர்த்தக பொருளாதார செயற்பாடுகளை மேம்படுத்த அரசாங்க முதலீடுகளை அதிகரிப்பதற்கு தீர்மானம் என்கிறார் நிதியமைச்சின் செயலாளர்

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பலமானதாக கட்டியெழுப்பும் வகையில் இந்த வருடம் முதல் எதிர்வரும் 2025ம் ஆண்டு வரை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் முதலீட்டு செலவுகளை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க எதிர்வரும் வருடங்களில் அரச முதலீட்டு செலவுகளை தேசிய உற்பத்தி வருமானத்தின் வீதத்திற்கமைய நூற்றுக்கு 06 வீதமாக முன்னெடுத்துச் செல்வதற்கு நிதியமைச்சு தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பலமானதாக கட்டியெழுப்புவது தொடர்பில் நிதியமைச்சு மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே நிதியமைச்சின் செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக தேசிய ரீதியிலான பொருளாதார வீழ்ச்சியை தவிர்க்கும் வகையில் நாட்டின் உற்பத்தி மற்றும் வர்த்தக பொருளாதார செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு நிதியமைச்சு தற்போது பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதா கவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் உற்பத்தியை சர்வதேச சந்தையை வெற்றி கொள்ளும் நிலைக்கு முன்னேற்றுவதற்கு உதவி வழங்கி அதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் முதலீட்டு வசதிகளை மேம்படுத்தி அண்மைக்காலமாக அமைச்சுபாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து ள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க விரைவாக முன்னேற்றமடைய வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் முதலீட்டு வசதிகளை பெற்றுக் கொடுத்துள்ளதுடன் பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் 2021 வரவு செலவு திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தனியார் துறை முதலீடுகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நீண்டகால தேவைகளை கவனத்திற் கொண்டு கிராமிய வீதிகள், குடிநீர், விவசாயம், சுகாதாரம், கல்வி மற்றும் பல்வேறு துறைகளுக்கு அடிப்படை மனித வள தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை டிஜிட்டல் மயமாக்குதல் வேலைத் திட்டத்திற்காக கடந்த வருடத்தில் 1,070 பில்லியன் ரூபா தேசிய உற்பத்தி சதவீதத்திற்கிணங்க நூற்றுக்கு 6.5 வரவு செலவுத் திட்டம் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் தனியார் துறை முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் 2021 தொடக்கம் 2025 வருட காலங்களில் அரச முதலீட்டை வருடாந்த தேசிய உற்பத்தி சதவீதத்திற்கு இணங்க நூற்றுக்கு 6.0 வீரத்தில் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment