முதலிடத்தில் உள்ள இலங்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, September 4, 2021

முதலிடத்தில் உள்ள இலங்கை

எம்.மனோசித்ரா

நாட்டின் சனத் தொகைக்கு அமைய கடந்த வாரம் கொவிட் தடுப்பூசி வழங்கலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது.

ஈக்குவாடோ, புருனே, நியுசிலாந்து, கியூபா, தென் கொரியா, ஸ்ரேல், கம்போடியா, நோர்வே மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை தடுப்பூசி வழங்கலில் முதலிடம் பிடித்துள்ளதாக 'தரவுகளில் எமது உலகம் ( Our World in Data ) நிலையத்தின் தலைமை அதிகாரி எட்வர்ட் மெத்திவ் தெரிவித்துள்ளார்.

எட்வர்ட் மெத்திவ் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவிற்கு அமைய இலங்கையில் கடந்த வாரத்தில் மாத்திரம் சனத் தொகையில் 13 சதவீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று ஈக்குவாடோர் நாட்டில் 12.5 சதவீதமானோருக்கும், புருனையில் 11.7 சதவீதமானோருக்கும் கடந்த வாரம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நியுசிலாந்தில் 11.6 சதவீதமானோருக்கும், கியுபாவில் 11.2 சதவீதமானோருக்கும், தென் கொரியாவில் 9.4 சதவீதமானோருக்கும், இஸ்ரேலில் 8 சதவீதமானோருக்கும் , கொலம்பியாவில் 7.6 சதவீதமானோருக்கும், நோர்வேயில் 7.6 சதவீதமானோருக்கும் மற்றும் அவுஸ்திரேலியாவில் 7.5 சதவீதமானோருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment