மற்றுமொறு சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 21, 2021

மற்றுமொறு சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார்

இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (21) முற்பகல் தனது கையொப்பத்தையிட்டு அதனை சான்றுரைப்படுத்தினார்.

நிதி அமைச்சரினால் 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டிருந்தது.

இதற்கமைய 2021ஆம் ஆண்டு 19ஆம் இலக்க இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டம் இன்று முதல் (21) நடைமுறைக்கு வருகிறது.

No comments:

Post a Comment