‘ஜிப்சீஸ்’ புகழ் பிரபல பாடகர் சுனில் பெரேரா காலமானார் - News View

Breaking

Monday, September 6, 2021

‘ஜிப்சீஸ்’ புகழ் பிரபல பாடகர் சுனில் பெரேரா காலமானார்

‘ஜிப்சீஸ்’ புகழ் பிரபல பாடகர் சுனில் பெரேரா காலமானார். ஜிப்சீஸ் இசைக்குழுவின் தலைவரும் அதன் பிரதான பாடகருமான சுனில் பெரேரா நேற்று பிற்பகல் திடீரென சுகவீனமுற்ற நிலையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணமடைந்துள்ளார்.

1952 செப்டெம்பர் 14ஆம் திகதி பிறந்த அவருக்கு மரணிக்கும் போது 68 வயதாகும்.

கடந்த மாதம் சுனில் பெரேராவுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் குணமடைந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

குணமடைந்து அண்மையில் வீடு திரும்பியிருந்த நிலையில், நியூமோனியா நிலை உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அவர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அவர் நேற்றையதினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

No comments:

Post a Comment