(நா.தனுஜா)
கொவிட்-19 தடுப்பூசிகள் மூலம் தொற்றுப் பரவலின் வேகத்தைக் குறைக்கும் அதேவேளை, ஏனைய நடவடிக்கைகள் ஊடாக வைரஸை முற்றாக இல்லாதொழிக்கும் உத்தியை சீனா கையாண்டது. அதன் விளைவாக நீண்ட காலத்திற்கு நாட்டை முடக்க வேண்டிய அவசியம் உருவாகவில்லை.
ஆனால் கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்காவினாலும் பிரிட்டனாலும் பின்பற்றப்பட்ட தோல்வியடைந்த செயற்திட்டத்தையே நாம் ஆரம்பத்திலிருந்து பின்பற்றினோம். அதனால் சமூகப் பரவல் தீவிரமடைந்ததுடன் ஒவ்வொரு மாதத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தது என்று சுகாதாரக் கொள்கைகள் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ரவீந்திர ரன்னன் எலிய சுட்டிக் காட்டியுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கடந்த ஜுன் மாதம் முதலாம் திகதி சினோவெக்ஸ் தடுப்பூசியை அவசர தேவைகளின்போது பயன்படுத்துவதற்காக அனுமதி வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஜுலை மாதம் 16 ஆம் திகதி இலங்கையின் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினாலும் அவ்வனுமதி வழங்கப்பட்டது.
இருப்பினும் சினோவெக்ஸ் தடுப்பூசியின் செயற்திறன் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் காணப்படும் நிலையில், அது பற்றிய ஆய்வுகளை மையமாகக் கொண்ட அறிக்கையொன்றை சுகாதாரக் கொள்கைகள் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ரவீந்திர ரன்னன் எலிய வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக் காட்டுள்ளார்.
No comments:
Post a Comment