(இராஜதுரை ஹஷான்)
பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார முன்வைத்துள்ள குற்றச்சாட்டு அடிப்படையற்றது. தனக்கு நெருக்கமானவரை பாதுக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்குமாறு இவரே என்னிடம் உத்தியோகப்பூர்வமாக கோரிக்கை விடுத்தார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பாதுக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விவகாரத்தில் எவ்வித அரசியல் தலையீடும் காணப்படவில்லை. இவரே அரசியல் ரீதியில் அழுத்தம் பிரயோகித்தார். இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு பொதுஜன பெரமுன கட்சியிடம் உத்தியோகப்பூர்வமாக வலியுறுத்தியுள்ளேன் எனவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் எடுக்கும் தீர்மானங்கள் அரசாங்கத்தில் உள்ள ஒரு சில அமைச்சர்களின் முட்டாள்த்தனமான செயற்பாடுகளினால் பலவீனமடைகிறது.
பாதுக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு, அதற்கு பதிலாக அமைச்சர் காமினி லொகுகேவிற்கு நெருக்கமானவர் பாதுக்க நிலைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டாம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவிடம் குறிப்பிட்டும் அவர் அதனை பொருட்படுத்தவில்லை. என பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார கடந்த 17 ஆம் திகதி இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது குற்றஞ் சாட்டினார்.
No comments:
Post a Comment