ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச விமானங்களை இயக்க தலிபான்கள் அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, September 27, 2021

ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச விமானங்களை இயக்க தலிபான்கள் அழைப்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் ஆகஸ்ட் 30ஆம் திகதி முழுவதுமாக வெளியேறியதையடுத்து தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் காபூல் விமான நிலையம் வந்தது.

ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு சர்வதேச விமானங்கள் மற்றும் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளுக்கும் தயாராக இருப்பதாக தலிபான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 30ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் முழுவதுமாக வெளியேறியதையடுத்து தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் காபூல் விமான நிலையம் வந்தது.

தற்போது காபூல் விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டதாகவும், முன்பு போல அனைத்து விமானங்களையும் இயக்க விமான நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் தலிபான் வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment