வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் ஆசிரியர் சேவை மூடிய சேவையாக பிரகடனப்படுத்தப்படும் - அமைச்சர் மஹிந்த அமரவீர - News View

About Us

About Us

Breaking

Friday, September 3, 2021

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் ஆசிரியர் சேவை மூடிய சேவையாக பிரகடனப்படுத்தப்படும் - அமைச்சர் மஹிந்த அமரவீர

நவம்பர் மாதம் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் ஆசிரியர் சேவையை மூடிய சேவையாக மாற்றுவதற்கான சுற்று நிருபம் வெளியிடப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர நம்பிக்கை வெளியிட்டார்.

ஆசிரியர்கள் 'ஒன்லைன்' கல்வி முறையை நிறுத்தி இருப்பதனால் தற்போது கிராமங்களில் உள்ள சிறுவர்களே கூடுதலாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வடக்கில் உள்ள சிறுவர்கள் ஒன்லைன் முறையின் கீழ் கற்று வருகின்றனர். அதேபோல், கொழும்பிலுள்ள உயர் பாடசாலைகளிலும் சர்வதேச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களும் ஒன்லைன் முறையின் கீழ் குறிப்பிட்ட பாட விதானங்களை படிப்படியாக பூர்த்தி செய்து வருகின்றனர்.

நவம்பர் மாதம் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் ஆசிரியர் சேவையை மூடிய சேவையாக மாற்றுவதற்கான சுற்று நிருபம் வெளியிடப்படும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

ஆசிரியர் அதிபர்களின் 11 கோரிக்கைகள் தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. ஒன்லைன் கல்வி முறைக்காக பெரும்பாலான பாடசாலைகளில் வசதிகள் இல்லை. இதற்கு தேவையான இணையத்தள வசதிகளையும், உபகரணங்களையும் பெற்றுக் கொடுப்பதற்கான திட்டம் வகுக்கப்பட வேண்டும். முதலில் அதிபர்களின் உத்தியோகபூர்வ அறைகளுக்கு அவற்றை பெற்றுக் கொடுக்க அமைச்சரவை உப குழு யோசனை முன்வைத்துள்ளது.

சுபோதினி குழு அறிக்கைக்கு அமைய சம்பளத்தை அதிகரித்தால் ஆசிரியர்களுக்காக மாத்திரம் மாதத்திற்கு புதிதாக எழுபத்தி ஒரு பில்லியன் ரூபாவை செலவிட நேரிடும். இதனை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அரசாங்கத்தால் எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

சம்பள ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய மாதாந்தம் 8 பில்லியன் ரூபாவை மாத்திரமே செலவிட முடியும். எனினும், தற்போதைய நிலைமையில் அந்த தொகை ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க போதாது. அதனால் அமைச்சரவை உப குழு இதற்கான பரிந்துரையை ஏற்றுக் கொள்ளவில்லை.

அதன் பின்னர் கல்வி அமைச்சின் பரிந்துரை ஆராயப்பட்டது. அதில் உள்ள பரிந்துரைக்கு அமைய மாதாந்தம் 15 மில்லியன் ரூபா செலவாகும். அமைச்சரவை உப குழுவின் புதிய முறையின் கீழ் இதற்காக முப்பத்து இரண்டு மில்லியன் ரூபாவை செலவிடுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்த தொகை சம்பளத்துக்காக மாத்திரமே செலவிடப்படும். இந்த குழு யோசனை முன்வைத்துள்ள ஏனைய கொடுப்பனவுகள் மற்றும் வசதிகளுக்காக பல பில்லியன் ரூபா செலவாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment