யார் எதிர்த்தாலும் காதி நீதிமன்றங்கள் இல்லாதொழிக்கப்படும், அமைச்சரவை உறுதியாகவுள்ளது என்கிறார் நீதியமைச்சர் அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Sunday, September 12, 2021

யார் எதிர்த்தாலும் காதி நீதிமன்றங்கள் இல்லாதொழிக்கப்படும், அமைச்சரவை உறுதியாகவுள்ளது என்கிறார் நீதியமைச்சர் அலி சப்ரி

‘யார் எதிர்த்­தாலும் இலங்­கையில் காதி நீதி­மன்­றங்கள் இல்­லா­தொ­ழிக்­கப்­ப­ட­வுள்­ளன. முஸ்­லிம்­களின் விவா­க­ரத்து உட்­பட குடும்ப விவ­கா­ரங்­களை பொது நீதி­மன்­றங்­களே கையா­ள­வுள்­ளன. இதற்­கான அனு­ம­தியை அமைச்­ச­ரவை ஏக­ம­ன­தாக வழங்­கி­யுள்­ளது. 30 பேர் கொண்ட அமைச்­ச­ர­வையில் நான் ஒரு­வனே முஸ்லிம். அதுவும் நான் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்­ட­வ­னல்ல. நான் தேசியப் பட்­டியல் உறுப்­பினர்’ என நீதி­ய­மைச்சர் அலி சப்ரி தெரி­வித்­துள்ளார்.

காதி நீதி­ப­திகள் போரத்தின் நிர்­வா­கி­க­ளுடன் சூம் செய­லி­யூ­டாக மேற்­கொண்ட கலந்­து­ரை­யா­டலின் போதும், தமிழ் ஊட­க­மொன்­றுக்கு வழங்­கிய நேர்­கா­ண­லிலும் அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், காதி நீதி­மன்ற முறை­மையை தக்க வைத்­துக்­கொண்டு முஸ்லிம் தனியார் சட்­டத்தில் சில திருத்­தங்­களைச் செய்­வ­தற்கே நான் தீர்­மா­னித்­தி­ருந்தேன். ஆனால் அமைச்­ச­ரவை முஸ்­லிம்கள் ஏனைய பொது நீதி­மன்­றத்­துக்குள் உள்­வாங்­கப்­பட வேண்­டு­மென்றும் முஸ்­லிம்­க­ளுக்கு தனி­யான சட்டம் தேவை­யில்லை எனவும் பல­தார மணம் இல்­லா­தொ­ழிக்­கப்­பட வேண்டும் என்றும் உறு­தி­யான தீர்­மா­னங்­களை மேற்­கொண்­டுள்­ளது. அமைச்­ச­ர­வையின் தீர்­மா­னத்தை என்னால் மீற முடி­யாது.’ என்றார்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை திருத்த வேண்டும் என பலர் கூறு­கி­றார்கள். இதே­வேளை ஒரு தரப்­பினர் இச்­சட்­டத்தில் மாற்­றங்கள் தேவை­யில்லை என்­கி­றார்கள். ஆனால் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கும், காதி நீதி­மன்ற முறை­மையை இல்­லாமற் செய்­வ­தற்கும் அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது. இச்­சட்டம் அமு­லாக்­கப்­படும் இறுதிக் கட்­டத்தை எட்­டி­யுள்­ளது. இதனை எவ­ரா­வது ஏற்றுக் கொள்­ளா­விட்டால் உயர் நீதி­மன்­றுக்குச் செல்­லலாம்.

நான் எடுத்த தீர்­மா­னத்தை இலே­சாக கைவி­டு­ப­வ­னல்ல. நான் யாருக்கும் பயப்­ப­டு­ப­வ­னு­மல்ல. எங்­க­ளது அர­சாங்கம் பற்றி எல்­லோ­ருக்கும் தெரியும். சிங்­கள பௌத்­தர்கள் 98 – 99 வீதத்­தினர் எங்களுக்கு வாக்களித்தார்கள். இலங்கையர் என்ற அடையாளத்தின் மீதே நான் நம்பிக்கை வைத்துள்ளேன். சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் அனைவரும் இலங்கையர்களே. இதற்காகவே நாம் போராடுகிறோம்.” என்றார்.-

(ஏ.ஆர்.ஏ.பரீல்) Vidivelli

No comments:

Post a Comment