மன்னாரில் ஏற்றியது சரி, அம்பாந்தோட்டையில் ஏற்றியது மட்டும் பிழையா? - காஞ்சன விஜேசேகர - News View

Breaking

Monday, September 6, 2021

மன்னாரில் ஏற்றியது சரி, அம்பாந்தோட்டையில் ஏற்றியது மட்டும் பிழையா? - காஞ்சன விஜேசேகர

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

அம்பாந்தோட்டையில் பைஸர் தடுப்பூசி ஏற்றும்போது கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள் மன்னாரில் பைஸர் தடுப்பூசி ஏற்றும்போது ஏன் கேள்வி எழுப்பவில்லை, மன்னாரில் ஏற்றியது சரி, அம்பாந்தோட்டையில் ஏற்றியது மட்டும் பிழையா? என்று இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர கேள்வி எழுப்பினார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான அவசரகால நிலைமைகள் குறித்த ஒழுங்குவிதிகள் மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், மேல் மாகாணத்தில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றியிருந்தால் இன்று நாட்டில் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. கொரோனா தடுப்பூசி ஏற்றும்போது அது தொடர்பில் எதிர்க்கட்சியினர் தவறான பிரசாரங்களை முன்னெடுத்து மக்களை குழம்பினர்.

சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலின் பேரிலேயே தடுப்பூசிகள் ஏற்றப்படுகின்றன. இந்நிலையில் அம்பாந்தோட்டையில் உள்ளவர்களுக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றியமை தொடர்பில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர். அப்படியானால் மன்னாரில் உள்ளவர்களுக்கு இதே பைஸர் தடுப்பூசி ஏற்றிய போது ஏன் கேள்வி எழுப்பவில்லை? மன்னாரில் ஏற்றியது சரி, அம்பாந்தோட்டையில் ஏற்றியது மட்டும் பிழையா?

கொரோனா தடுப்பூசி ஏற்ற மாட்டேன் எனக்கூறிய எதிர்க்கட்சித் தலைவர் இறுதியாக ஏற்றிக் கொண்ட தடுப்பூசியும் பைஸர் தான் எனவே கொரோனா தடுப்பூசியை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என்றார்.

No comments:

Post a Comment