ஸ்பெயின் தீவான லா பல்மாவில் தொடரும் எரிமலை வெடிப்பு தீவிரம் அடைந்துள்ள நிலையில் அங்கு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
கும்ப்ரே வீஜா எரிமலை கடந்த வாரம் வெடிக்க ஆரம்பித்த நிலையில் ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேற்றப்பட்டனர். 350 க்கும் அதிகமான வீடுகள் அழிந்துள்ளன.
வானில் கரும்புகை தற்போது நான்கு கிலோமீற்றர் தூரம் வரை பரந்து காணப்படுகிறது. இந்த கரும்புகை மற்றும் சாம்பல் காரணமான விமானநிலையத்தை செயற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விமான நிலையம் மூடப்பட்டதால் அந்த தீவில் இருந்து மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் சுற்றுலா விமானங்கள் மற்றும் கனேரியா தீவுகளை இணைக்கும் விமானங்களே பெரும்பாலும் இயங்கி வருகின்றன.
எரிமலையில் இருந்து புதிதாக பயங்கர வெடிப்புகள் இடம்பெற்று வருவதொடு புதிதாக திறந்திருக்கும் துளையில் இருந்தும் எரிமலை குழம்பு வெளியேற ஆரம்பித்துள்ளது.
சுமார் 80,000 மக்கள் வசிக்கும் லா பல்மா தீவின் தெற்கு பக்மாகவே இந்த எரிமலை உள்ளது. இந்த அனர்த்தத்தினால் இதுவரை எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment