ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார் ! - News View

About Us

About Us

Breaking

Sunday, September 5, 2021

ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார் !

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையில் பிரதான மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றிய ஜோர்ஜ் மாஸ்டர் அல்லது தம்பி அப்பா என்றழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் இன்று காலமானார்.

ஆங்கிலம் , சிங்கள மொழிகளில் நன்கு புலமைபெற்ற ஜோர்ஜ் மாஸ்டர், கடந்த 1936 ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.

ஆரம்பத்தில் தபாலதிபராக பணியாற்றிய நிலையில், பின்னர் 1994 ஆம் ஆண்டு காலப்பகுதி தொடக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையினருடன் இணைந்து மொழி பெயர்ப்புத் துறையில் செயற்பட்டு வந்தார்.

இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேச நாடுகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுக்களின் போது பிரதான மொழி பெயர்ப்பாளராகவும் ஜோர்ஜ் மாஸ்டர் செயற்பட்டிருக்கின்றார்.

ஜோர்ஜ் மாஸ்டர், 2009 ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு 07 ஆம் மாதம் 04 ஆம் திகதி அவருக்கு எதிரான அனைத்து வழக்குகளிலிருந்தும் கொழும்பு பிரதான நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment