பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதியளித்தது அமெரிக்கா - News View

About Us

About Us

Breaking

Thursday, September 23, 2021

பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதியளித்தது அமெரிக்கா

அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கானோர் 2 ஆவது டோஸ் செலுத்திக் கொண்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதையடுத்து அவர்களில் தகுதியானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில தடுப்பு மருந்துகளை தவிர பெரும்பாலான தடுப்பு மருந்துகள் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகின்றன. இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் போடப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. முன்பைவிட வேகமாக பரவும் தன்மையுடன் உருமாறிய கொரோனா இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

இதனால் பல்வேறு நாடுகள் தடுப்பூசியின் 3 ஆவது டோசை (பூஸ்டர் டோஸ்) மக்களுக்கு செலுத்த முடிவு செய்துள்ளனர். குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் குடிமக்களுக்கு பூஸ்டர் டோசை செலுத்தும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளன.

அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை 3 ஆவது டோஸ் செலுத்த அந்த நிறுவனம் அமெரிக்க அரசிடம் விண்ணப்பித்து இருந்தது. 

இதை ஆய்வு செய்த நிபுணர் குழுவினர் பைசர் தடுப்பூசியின் 3 ஆவது டோசை 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் அதிக ஆபத்துள்ளவர்களுக்கு செலுத்தலாம் என்று பரிந்துரை செய்திருந்தது.

இந்த நிலையில் அமெரிக்காவில் பைசர் தடுப்பூசியின் 3 ஆவது டோஸை செலுத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. 

65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோய் தொற்று அபாயம் உள்ள இளைஞர்கள் 3 ஆவது தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என்றும் முதல் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட 6 மாதத்துக்கு பின் 3 ஆவது டோசை போட்டுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கானோர் 2 ஆவது டோஸ் செலுத்திக் கொண்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதையடுத்து அவர்களில் தகுதியானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 

No comments:

Post a Comment