அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் அரிய அசல் பிரதி ஒன்று கூடிய விரைவில் ஏலத்தில் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1787ஆம் ஆண்டு, பிலடெல்பியா நகரில் அது கையெழுத்திடப்பட்டது. அது போன்ற 500 பிரதிகள் இருந்ததாகவும், ஆனால் தற்போது 11 மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் சொதபி நிறுவனம் கூறியது.
அது அமெரிக்காவின் மூத்த தலைமுறைத் தலைவர்களான ஜோர்ஜ் வொஷிங்டன், பென்ஜமின் ப்ரான்க்லின், ஜேம்ஸ் மெடிசன் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.
ஏலம் விடப்படவுள்ள பிரதி சிறந்த நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆவணம் தற்போது அமெரிக்க அரும்பொருள் சேகரிப்பாளரான டோரெதி டப்பர் கோல்ட்மானிடம் உள்ளது.
இதன் பெறுமதி 15 மில்லியன் தொடக்கம் 20 மில்லியன் டொலர் வரை இருக்கும் என்று இதனை ஏலம் விடும் சொதபி நிறுவனம் கணித்துள்ளது.
இந்தப் பிரதி கடைசியாக 1988 ஆம் ஆண்டு ஏலம் விடப்பட்டபோது அதனை கோல்ட்மான் 165,000 டொலருக்கு வாங்கினார்.
இந்த அரசியலமைப்பு ஆவணத்தின் இரு பிரதிகள் அமெரிக்க பாராளுமன்ற நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1787 ஆம் ஆண்டு வரையப்பட்ட இந்த அரசியலமைப்பு அடுத்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது.
No comments:
Post a Comment