இஸ்ரேலுடன் உறவுக்கு அழைப்பு : ஈராக்கில் மூவர் மீது பிடியாணை - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 28, 2021

இஸ்ரேலுடன் உறவுக்கு அழைப்பு : ஈராக்கில் மூவர் மீது பிடியாணை

இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்துவது தொடர்பில் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற முன்னாள் எம்.பி ஒருவர் உட்பட மூவர் மீது ஈராக் நீதித்துறை பிடியாணை பிறப்பித்துள்ளது.

அமெரிக்க அமைப்பு ஒன்றினால் ஈராக்கின் சுயாட்சி பெற்ற பிராந்தியமான குர்திஸ்தானில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் பழங்குடித் தலைவர்கள் உட்பட 300 க்கும் அதிகமான ஈராக்கியர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்ற ஏனையவர்கள் அடையாளம் காணப்பட்ட பின் அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதித்துறை அதன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதில் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்த அழைப்பு விடுத்த மூவரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பழங்குடித் தலைவர் விசாம் அல் ஹர்தன், முன்னாள் எம்.பி மிதால் அல் அலூசி மற்றும் கலாசார அமைச்சின் ஆய்வுப் பிரிவுத் தலைவர் சஹர் அல் தாய் ஆகியோரின் பெயர்களே வெளியிடப்பட்டுள்ளன. 

சர்ச்சைக்குரிய மதச்சார்பற்ற சுன்னி எம்.பியான அலூசி, 2008 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டதை அடுத்து பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டது தொடக்கம் அதனுடன் போர் சூழலில் இருக்கும் நாடாக ஈராக் உள்ளது.

எனினும் ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியம் இஸ்ரேலுடன் ஒத்துழைப்போடு செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment