மதுபானசாலைகள் குறித்து கேள்விகளை எழுப்பி என்னை அசௌகரியத்திற்கு உட்படுத்த வேண்டாம் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் - News View

About Us

About Us

Breaking

Monday, September 20, 2021

மதுபானசாலைகள் குறித்து கேள்விகளை எழுப்பி என்னை அசௌகரியத்திற்கு உட்படுத்த வேண்டாம் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

எம்.மனோசித்ரா

மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் இந்த விடயம் குறித்து கருத்து வெளியிடுவதிலிருந்து நான் விலகியிருக்கின்றேன். இது குறித்த கேள்விகளை எழுப்பி என்னை அசௌகரியத்திற்கு உட்படுத்த வேண்டாம் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்களினால் கேள்வியெழுப்பப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்தும் பதிலளித்த அவர், மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. எனவே அது குறித்து தற்போது கருத்து வெளியிடுவது பொருத்தமானதாக இருக்காது. எனவே இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிப்பத்திலிருந்து நான் விலகிக் கொள்கின்றேன்.

எனவே இது குறித்த கேள்விகளை தொடர்ந்தும் கேட்டு என்னை அசௌகரியத்திற்கு உட்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன். காரணம் என்னால் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சட்ட ரீதியான நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்துவதாகக் காணப்பட்டால் நான் தனித்துதான் அதற்கு முகங்கொடுக்க வேண்டும். எனவே என்னால் இதுபற்றி எதனையும் கூற முடியாது என்றார்.

No comments:

Post a Comment