நோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கேட்கும் சீரம் நிறுவனம் - News View

About Us

About Us

Breaking

Friday, September 24, 2021

நோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கேட்கும் சீரம் நிறுவனம்

அவசரகால பயன்பாட்டுக்காக நோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி கேட்டு உலக சுகாதார ஸ்தாபனத்திடம் சீரம் நிறுவனம் மனு அளித்துள்ளது.

இந்தியாவின் சீரம் நிறுவனமும், அமெரிக்காவின் நோவோவேக்ஸ் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி ஒன்றை தயாரித்துள்ளன. 

கொரோனாவுக்கு எதிராக இந்த தடுப்பூசி 90 சதவீத செயல்திறனை கொண்டிருப்பதாக கடந்த ஜூன் மாதம் இந்த நிறுவனங்கள் அறிவித்திருந்தன.

இந்நிலையில், இந்த தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி கேட்டு உலக சுகாதார ஸ்தாபனத்திடம் மேற்படி நிறுவனங்கள் மனு செய்துள்ளன. 

சர்வதேச தடுப்பூசி பகிர்வு திட்டத்தின் கீழ் இந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம்  அனுமதி வழங்கும் எனவும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மற்ற தடுப்பூசிகளை ஒப்பிடுகையில் நோவோவேக்ஸ் தடுப்பூசியை எடுத்துச் செல்வதும், சேமித்து வைப்பதும் எளிது என்பதால், ஏழை நாடுகளுக்கு அதிக டோஸ்கள் கிடைப்பதில் இந்த தடுப்பூசி முக்கிய பங்காற்றும் என இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment