இலங்கையில் இதுவரை தடுப்பூசிகளை பெற்ற கர்ப்பிணிகளிடமிருந்து எவ்வித சிக்கலும் பதிவாகவில்லை - குடும்ப சுகாதார பணியகம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 22, 2021

இலங்கையில் இதுவரை தடுப்பூசிகளை பெற்ற கர்ப்பிணிகளிடமிருந்து எவ்வித சிக்கலும் பதிவாகவில்லை - குடும்ப சுகாதார பணியகம்

இலங்கையில் இதுவரை கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்ற சுமார் 100,000 கர்ப்பிணி தாய்மார்களிடம் இருந்து எந்தவித சிக்கல்களையும் பதிவு செய்யவில்லை என்று குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

எனவே, அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் உடனடியாக கொவிட்-19 தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறும் பணியகம் வலியுறுத்தியுள்ளது.

தடுப்பூசி பெற்ற அனைத்து தாய்மார்களின் தரவுத்தளத்தை நாங்கள் பராமரிக்கிறோம். அந்த தரவுகளின்படி தடுப்பூசியை பெற்றுக் கொண்ட தாய்மார்களில் எவரும் இதுவரை சிக்கல்களுக்கு உள்ளாகவில்லை.

தடுப்பூசி செலுத்தப்பட்ட கர்ப்பிணிப் தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளையும் பரிசோதித்துள்ளோம், அந்த பரிசோதனைகளிலும் குழந்தைகள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

தடுப்பூசி திட்டத்தின் நோக்கம் சிக்கல்களைக் குறைப்பதும் தாய்மார்களிடையே இறப்பைக் குறைப்பதும் ஆகும். நீங்கள் இன்னும் தடுப்பூசிகளைப் பெறவில்லை என்றால், உங்கள் உள்ளூர் குடும்ப சுகாதார அதிகாரியைத் தொடர்புகொண்டு விரைவில் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் குடும்ப சுகாதார பணியகம் வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment