தினேஷ் பிரியன்த, துலான் கொடிதுவக்கு ஆகியோரின் வருகை பிற்போடப்பட்டது - News View

Breaking

Thursday, September 2, 2021

தினேஷ் பிரியன்த, துலான் கொடிதுவக்கு ஆகியோரின் வருகை பிற்போடப்பட்டது

எம். எம். சில்வெஸ்டர்

டோக்கியோ பராலிம்பிக்கில் பதக்கம் வென்று இலங்கை திருநாட்டுக்கு பெருமை சேர்த்த தினேஷ் பிரியன்த மற்றும் துலான் கொடிதுவக்கு ஆகிய இருவரும் நாளை அதிகாலை 3 மணிக்கு வருவதாக இருந்த போதிலும் அவர்களின் வருகை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டதாக இலங்கை பராலிம்பிக் குழுவின் உப தலைவர் பிரியன்த பீரிஸ் தெரிவித்தார்.

டோக்கியோ பராலிம்பிக்கில் உலக சாதனையுடன் தங்கம் வென்ற தினேஷ் பிரியன்த, வெண்கல பதக்கம் வென்ற துலான் கொடிதுவக்கு இருவருடனும் ஏனைய போட்டியாளர்களும் சேர்ந்து வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதன் காரணமாக அவர்கள் இருவரினதும் வருகை பிற்போடப்பட்டதாகவும் அவர்களுக்கான வரவேற்பு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும் என பிரியன்த பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

எனினும், படகோட்டப் போட்டியில் பங்கேற்ற பிரியமல் ஜயகொடி மற்றும் சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற டி.எஸ்.ஆர். தர்மசேன இருவரும் இன்றைய தினம் நாட்டை வந்தடைவர் என அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment