நாட்டில் மதுபானசாலைகள் திறக்கப்பட்டு, பாராளுமன்றம் மூடப்படுகின்றது - லக்ஸ்மன் கிரியெல்ல - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 22, 2021

நாட்டில் மதுபானசாலைகள் திறக்கப்பட்டு, பாராளுமன்றம் மூடப்படுகின்றது - லக்ஸ்மன் கிரியெல்ல

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் மதுபானசாலைகள் திறக்கப்படுகின்றன. ஆனால் நாட்டின் முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கோரியும் பாராளுமன்றம் மூடப்படுகின்றது. அரசாங்கம் அடிப்படையற்ற விதத்தில் தீர்மானங்களை எடுப்பதாக எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை ஒழுங்குப்பிரச்சினை ஒன்றினை எழுப்பியே அவர் இக்கருத்தினை முன்வைத்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நாளையும், நாளை மறு தினமும் பாராளுமன்ற அமர்வுகளை நிறுத்தும் விதத்தில் அரசாங்கம் இன்றைய பிரேரணையை கொண்டுவந்துள்ளது.

கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் 25 நாட்கள் பாராளுமன்ற அமர்வுகள் எமக்கு கிடைக்காது போயுள்ளது. அதுமட்டுமல்ல நாட்டின் பிரச்சினைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

நாட்டில் பார்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பாராளுமன்றம் மூடப்பட்டடுகின்றது. நாளையும் நாளை மறுதினமும் பாராளுமன்றம் மூடப்படுகின்றது. ஆகவே அடிப்படை ஒன்று இல்லாது செயற்படக்கூடாது என்றார்.

No comments:

Post a Comment