தனிமைப்படுத்திக் கொண்டார் ரஷ்ய ஜனாதிபதி : தஜிகிஸ்தானுக்கான பயணமும் ரத்து - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 14, 2021

தனிமைப்படுத்திக் கொண்டார் ரஷ்ய ஜனாதிபதி : தஜிகிஸ்தானுக்கான பயணமும் ரத்து

ரஷ்ய ஜனாதிபதி மாளிகை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த வார இறுதியில் தஜிகிஸ்தானுக்கு ஜனாதிபதி புடின் மேற்கொள்ள இருந்த பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட செய்தியில், “தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரக்மானை தொடர்பு கொண்ட ரஷ்ய ஜனாதிபதி புடின், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதால் பயணம் மேற்கொள்ள இயலாது” எனத் தெரிவித்தார். 

ஏற்கனவே ரஷ்ய தயாரிப்பு கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி இரண்டு முறையும் ரஷ்ய ஜனாதிபதி செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் 71 இலட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1.9 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment