வெலிகடை - ராஜகிரிய வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் 71 வயதுடைய பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலை சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் சகோதரி 25,000 ரூபாவை சம்பவத்தின் முந்தைய நாளில் குறித்த பெண்ணிடம் கொடுத்துள்ளமை வெலிகடை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பொலிஸார் வீட்டை சோதனை செய்ததில், கொலையை தொடர்ந்து அந்த பணம் காணாமல் போனது தெரியவந்தது.
அதனால் பணத்தை கொள்ளையிடும் முயற்சியில் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் ஊகுத்தனர்.
அதன் பின்னர் பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காக உயிரிழந்த பெண்ணின் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெறப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளினூடாக சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.
அதற்கிணங்க ராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 53 வயதான சந்தேக நபரை நேற்று பொலிஸார் கைது செய்தனர்.
கைதின் பின்னர் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட் விசாரணையில், குறித்த வீட்டின் கூரையின் வழியாக வீட்டிற்குள் புகுந்து பெண்னை கொலை செய்ததன் பின்னர், பணத்தை திருடியமை தெரியவந்துள்ளது.
கைதான சந்தேக நபர் போதைக்கு அடிமையானவர் என்பதையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேக நபரை இன்று புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment