மதுபோதையில் சாரதி - பஸ் மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி - News View

About Us

About Us

Breaking

Monday, September 20, 2021

மதுபோதையில் சாரதி - பஸ் மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

திருத்தப்பணி சேவை பஸ் மோதியதில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (19) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி பெனிசுதுவ பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சரத்குமார பியதாஸ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நாவலப்பிட்டியிலிருந்து கினிகத்தேனை பகுதிக்கு வந்த நாவலப்பிட்டி டிப்போவிற்கு சொந்தமான திருத்தப்பணி சேவை பஸ் கினிகத்தேனை அனுரத்த பிரத்தமிக்க வித்தியாலத்திக்கு அருகில் குறித்த நபர் மீது மோதுண்டுள்ளது.

விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதி மதுபோதையில் இருந்துள்ளதுடன் விபத்து தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்காது தலைமறைவாகியுள்ளார்.

படுகாயமடைந்தவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தலை மறைவாகிய பஸ் சாரதியை நாவலப்பிட்டி போக்குவரத்து பொலிஸார் கைது செய்துள்ளதுடன் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

மலையக நிருபர் இராமச்சந்திரன்

No comments:

Post a Comment