மாலைதீவிற்கு இலங்கையிலிருந்து மணல் ஏற்றுமதி செய்தது ஏன்? புவிசரிதவியல், சுரங்க பணியகம் விளக்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 14, 2021

மாலைதீவிற்கு இலங்கையிலிருந்து மணல் ஏற்றுமதி செய்தது ஏன்? புவிசரிதவியல், சுரங்க பணியகம் விளக்கம்

மாலைதீவில் புதிய தீவு ஒன்றை அமைப்பதற்கு இலங்கையில் இருந்து மணல் ஏற்றுமதி செய்யப்பட்டதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என புவிசரிதவியல் மற்றும் அளவை சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

மாலைதீவில் கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை நிறுவனம் ஒன்றுக்கு தேவையான வர்த்தக ரீதியிலான மணல் தொகை மாத்திரம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை இராஜதந்திர மட்டத்தில் இடம்பெறவில்லை என்றும் குறித்த மணலானது குழாய் இணைப்பு மற்றும் நீர்நிலைகளை நிரப்புவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது என்றும் அப்பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக 8 க்யுப் மணல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றில் க்யுப் ஒன்றுக்கு ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் அறவிடப்பட்டுள்ளதாகவும் புவிசரிதவியல் மற்றும் அளவை சுரங்க பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் பாராளுமன்ற அமர்வில் உரையாற்றியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இது தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment