உயிரிழந்து விட்டதாக கூறப்பட்ட அல்-கொய்தாத் தலைவர் உயிருடன்? - News View

Breaking

Sunday, September 12, 2021

உயிரிழந்து விட்டதாக கூறப்பட்ட அல்-கொய்தாத் தலைவர் உயிருடன்?

உயிரிழந்து விட்டதாக கூறப்பட்ட அல்-கொய்தாத் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி, 9/11 தாக்குதலின் 20 ஆவது ஆண்டு நிறைவு தொடர்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு புதிய காணொளிப் பதிவில் தோன்றியுள்ளார்.

அல்கொய்தாவின் பிரபல தலைவர் ஒசாமா பின்லேடனின் வாரிசான அய்மான் அல்-ஜவாஹிரி 2020 இல் இராணுத்தினர் நடத்திய ஒரு தாக்குதலில் உயிரிழந்தார் என ஊகங்கள் பரவின.

இந்நிலையில் அல்கொய்தா பயங்கரவாதக் குழுவின் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி, 9/11 தாக்குதலின் 20 ஆவது ஆண்டு விழாவினை முன்னிட்டு சனிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் தோன்றியுள்ளார் என இஸ்லாமிய குழுக்களின் இணையத்தள செயல்பாட்டைக் கண்காணிக்கும் SITE புலனாய்வு குழு கூறியுள்ளது.

எனினும் 60 நிமிட அந்தக் காணொளிக் காட்சிகள் சமீத்தியவை தானா என்பது தொடர்பில் தற்சமயம் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

காரணம் அவர் "தலிபான்களின் ஆப்கானிஸ்தான் வெற்றியைப் பற்றி அந்த காணொளியில் குறிப்பிடவில்லை. ஆயினும் கூட, இந்த ஆண்டு ஜனவரி மாதம் சிரியாவில் அல்-கெய்தாவுடன் தொடர்புடைய ஹுராஸ் அல்-டீன் குழு நடத்திய "ஜெருசலம் யூதமயமாக்கல்" மற்றும் ரஷ்ய இராணுவத் தளத்தின் மீதான தாக்குதல் பற்றி அல்-ஜவாஹிரி பேசியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad