ரிஷாட், மனைவி, மாமனாருக்கு விளக்கமறியல் நீடிப்பு - தரகர், மைத்துனருக்கு பிணை - News View

Breaking

Monday, September 6, 2021

ரிஷாட், மனைவி, மாமனாருக்கு விளக்கமறியல் நீடிப்பு - தரகர், மைத்துனருக்கு பிணை

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில், தீக்காயங்களுடன் மரணமடைந்த 16 வயதுச் சிறுமி, டயகம ஹிஷாலினி ஜூட்குமார் தொடர்பான வழக்கில் சந்தேகநபர்களாக பெயரிடப்ட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீன், அவரது மனைவி மற்றும் மனைவியின் தந்தை ஆகியோருக்கு எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் விடுத்த பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டதோடு, ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் மற்றும் சிறுமியை அழைத்து வந்த தரகர் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு விசாரணை இன்று (06) கொழும்பு நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் 23ஆம் திகதி குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவ்வழக்கின் 5ஆவது சந்தேகநபராக ரிஷாட் பதியுதீன் பெயரிடப்பட்டிருந்ததோடு, சந்தேகநபர்களுக்கு இன்று (06) வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருந்தது.

டயகமவைச் சேர்ந்த ஹிஷாலியின் மரணம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் சிஹாப்தீன் ஆயிஷா (46), மொஹமட் சிஹாப்தீன் (70), சங்கர் என அழைக்கப்படும் பொன்னையா பண்டாரம் (64) ஆகியோர் கடந்த ஜூலை 23ஆம் திகதி பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment