எவ்வித அச்சமுமின்றி தடுப்பூசியை பெறுங்கள், சமூக வலைத்தள செய்திகளை நம்ப வேண்டாம் - இளைஞர், யுவதிகளுக்கு சன்ன ஜயசுமன தெரிவிப்பு - News View

Breaking

Wednesday, September 15, 2021

எவ்வித அச்சமுமின்றி தடுப்பூசியை பெறுங்கள், சமூக வலைத்தள செய்திகளை நம்ப வேண்டாம் - இளைஞர், யுவதிகளுக்கு சன்ன ஜயசுமன தெரிவிப்பு

அரசாங்கத்தின் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எந்தவொரு தடுப்பூசியையும் இளைஞர், யுவதிகள் பயமின்றி பெற்றுக் கொள்ளலாம். தடுப்பூசி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் ஆதாரமற்ற செய்திகளை நம்ப வேண்டாம் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் தொடர்ந்தும் பல மாவட்டங்களிலும் இடம்பெற்று வருகின்ற நிலையில் 20 வயதிற்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டோருக்கான தடுப்பூசிகளும் பல்வேறு பிரதேசங்களில் நேற்றையதினம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இளைஞர் யுவதிகள் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதில் குறைந்தளவு ஆர்வமே காணப்படுவதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர், தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டால் பாலியல் ரீதியாக பலம் குறைவடைவதாகவும் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போவதாகவும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்கள் காரணமாகவே அவர்கள் தடுப்பூசி பெற்றுக் கொள்வதில் தாமதம் காட்டுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளார் இராஜாங்க அமைச்சர், சில பிரதேசங்களில் இளைஞர், யுவதிகள் குறைந்த அளவிலேயே தடுப்பூசிகளைப் பெற்று வருகின்றனர். இளைஞர் யுவதிகளுக்கு தவறான தகவல்களை வழங்கி சில சமூக வலைத்தளங்கள் பரப்பி வருகின்றன.

அந்த வகையில் இது தொடர்பில் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் சம்பந்தமாக ஆய்வுகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment