பாடசாலை மாணவர்களுக்கு இரு வாரங்களுக்குள் தடுப்பூசி, எவ்வித அச்சமுமின்றி பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறார் சன்ன ஜயசுமன - News View

About Us

About Us

Breaking

Monday, September 20, 2021

பாடசாலை மாணவர்களுக்கு இரு வாரங்களுக்குள் தடுப்பூசி, எவ்வித அச்சமுமின்றி பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறார் சன்ன ஜயசுமன

(எம்.மனோசித்ரா)

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு அனுமதி கிடைக்கப் பெறும் முதலாவது தினத்திலேயே அவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும். அதற்கமைய எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அந்த பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சைகள் காலம் தாழ்த்தப்பட்டுள்ளன. இந்த கால தாமதமானது மாணவர்களின் வாழ் முழுவதிலும் தாக்கம் செலுத்தும்.

இந்த நிலைமையிலிருந்து மாணவர்களை மீட்டு, துரிதமாக பரீட்சைகளை நடத்துவதே எமது தற்போதைய தேவையாகும். அதற்கமைய மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் மிக முக்கியத்துவமுடையவையாக உள்ளன.

மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசிகளே வழங்கப்படவுள்ளன. எனவே எவ்வித அச்சமும் இன்றி தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு மாணவர்களையும் வலியுறுத்துகின்றோம்.

மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் தொடர்ச்சியாக மதிப்பீடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

No comments:

Post a Comment