ஐபிஎல் போட்டியில் புதிய சாதனை படைத்த ஹர்‌ஷல் படேல் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 30, 2021

ஐபிஎல் போட்டியில் புதிய சாதனை படைத்த ஹர்‌ஷல் படேல்

சர்வதேச போட்டியில் விளையாடாத ஒருவர் ஐ.பி.எல்.லில் அதிக விக்கெட் சாய்த்தவர் என்ற பெருமையை பெங்களூர் அணி வீரர் ஹர்ஷல் படேல் பெற்றுள்ளார்.

ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூர் அணி 7 வது வெற்றியை பெற்றது.

டுபாயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் பெங்களூர் அணிக்கு 150 ஓட்டங்கள் இலக்காக இருந்தது.

இவின் லீவிஸ் 37 பந்தில் 58 ஓட்டங்களும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), ஜெய்ஷ்வால் 22 பந்தில் 31 ஓட்டங்களும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஹர்‌ஷல் படேல் 3 விக்கெட்டும், யசுவேந்திர சாகல், சபாஷ் அகமது தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் ஆடிய றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 17.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேக்ஸ்வெல் 30 பந்தில் 50 ஓட்டங்களும் (6 பவுண்டரி 1 சிக்சர்), ஸ்ரீகர் பரத் 35 பந்தில் 44 ஓட்டங்களும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

பெங்களூர் அணி பெற்ற 7 வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து 3 வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 7 வது தோல்வியை தழுவியது. அந்த அணி 8 புள்ளிகளுடன் 7 வது இடத்தில் உள்ளது.

இந்த ஆட்டத்தில் 3 விக்கெட் கைப்பற்றியதன் மூலம் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீரர் ஹர்‌ஷல் படேல் 26 விக்கெட்டை எடுத்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். 

11 ஆட்டத்தில் அவர் 26 விக்கெட் எடுத்துள்ளார். இதன் மூலம் ஹர்‌ஷல் படேல் ஐ.பி.எல். போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். சர்வதேச போட்டியில் விளையாடாத ஒருவர் ஐ.பி.எல்.லில் அதிக விக்கெட் சாய்த்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

இதற்கு முன்பு 2015ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் இதே பெங்களூர் அணியை சேர்ந்த யசுவேந்திர சாகல் 23 விக்கெட் கைப்பற்றி இருந்தார். அதை ஹர்‌ஷல் படேல் முறியடித்தார்.

இதேவேளை, ஐ.பி.எல். அத்தியாயமொன்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனைக்குரியவராக மேற்கிந்தியத் தீவுகளின் டுவெய்ன் பிராவோ உள்ளார்.

இவர் 2013 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 32 விக்கெட்டுகளை கைப்பற்றியமை சாதனையாக உள்ளது. எவ்வாயினும், இந்த சாதனையை முறியடிப்பதற்கு ஹர்ஷல் பட்டேலுக்கு இன்னும் 7 விக்கெட்டுகளே தேவையாகவுள்ளன.

ஒட்டு மொத்த ஐ.பி.எல். வரலாற்றில் அதிகூடிய விக்கெட்டுகளை கைப்பற்றியவராக மும்பை அணிக்காக விளையாடியிருந்த இலங்கையின் லசித் மாலிங்க திகழ்கிறார். இவர் 122 போட்டிகள் விளையாடி 170 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment