அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 1, 2021

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள்

மக்கள் தமது இயல்பு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும் வகையில் தேவையான நெல், அரிசி மற்றும் சீனி உள்ளிட்ட உணவுப் பொருட்களை விநியோகித்தலுக்கான இணைப்பு நடவடிக்கைகளுக்காக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் ஆலோசகர் யூ.ஆர்.டி. சில்வா தெரிவித்துள்ளார்.

இவ் ஆணையாளரின் அதிகாரம் தொடர்பில் தெரிவித்துள்ள நீதி அமைச்சின் ஆலோசகர், நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அல்லது அதற்கு சமமான உயர் நீதிமன்றங்கள் அல்லது அதற்கு மேலான நீதிமன்றங்கள் அதன் மூலம் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை சவாலுக்குட்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக அரசாங்கத்தினால் மேஜர் ஜெனரல் எம்.டி.எஸ்.பி. நிவுன்ஹெல்ல நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து அது தொடர்பில் தெரிவிக்கையிலேயே நிதி அமைச்சின் ஆலோசகர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் கண்காணிப்பின் கீழ் ஏனைய அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடைப்பதுடன் பல்வேறு இடங்களிலும் மறைத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டு அரசாங்கத்தின் மட்டுப்படுத்தப்பட்ட விலைகளுக்கு அவற்றை விற்பனை செய்தல் விநியோகத்திற்கான நடவடிக்கைகளை விரிவாக்குதல் இச் செயற்பாடுகள் அவரால் மேற்கொள்ளப்படவுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன் சீல் வைக்கப்பட்டுள்ள களஞ்சியசாலைகளுக்கும் சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு இச்சட்டம் மூலமாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment