பதுக்கப்பட்ட 83 ஆயிரம் மெட்ரிக் தொன் சீனி அரச பொறுப்பில், சுற்றிவளைப்பு தொடரும் என்கிறார் அத்தியவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் - News View

Breaking

Wednesday, September 1, 2021

பதுக்கப்பட்ட 83 ஆயிரம் மெட்ரிக் தொன் சீனி அரச பொறுப்பில், சுற்றிவளைப்பு தொடரும் என்கிறார் அத்தியவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம்

(எம்.எப்.எம்.பஸீர்)

மேல் மாகாணத்தின் களஞ்சியங்களில் பதுக்கப்பட்டிருந்த 83 ஆயிரம் மெட்ரிக் தொன் சீனி, அரசின் பொறுப்பின் கீழ் எடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் செனரத் நிவுன்ஹல்ல தெரிவித்தார்.

இதில் 30 ஆயிரம் தொன் சீனி, இன்றையதினம் விற்பனைக்காக ச.தொ.ச. மற்றும் கூட்டுறவு நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டதாகவும் பதுக்கல் காரர்களை தேடிய சுற்றிவளைப்பு தொடரும் எனவும் அவர் மேலும் கூறினார்.

மக்கள் கஷ்டத்தில் இருக்கும் போது இவ்வாறு உணவுப் பொருட்களை பதுக்குவது பாரிய குற்றமாகும். அவ்வாறு உணவுப் பொருட்களை பதுக்குவோருக்கு என்னிடம் எந்த மன்னிப்பும் கிடையாது என சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment