கடும் வேதனைக்குள்ளாகும் கொவிட் நோயாளருக்கான 'ரெகன் கோவ்' : புதிய மருந்து கொள்வனவுக்கு சுகாதார அமைச்சு அனுமதி : 81 வீதமான மரணங்களை தடுக்க முடியு​மென பரிசோதனை முடிவுகள் தெரிவிப்பு - News View

Breaking

Thursday, September 2, 2021

கடும் வேதனைக்குள்ளாகும் கொவிட் நோயாளருக்கான 'ரெகன் கோவ்' : புதிய மருந்து கொள்வனவுக்கு சுகாதார அமைச்சு அனுமதி : 81 வீதமான மரணங்களை தடுக்க முடியு​மென பரிசோதனை முடிவுகள் தெரிவிப்பு

கடுமையான வேதனைகளை அனுபவித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு பயன்படுத்தும் 'ரெகன் கோவ்' என்ற மருந்தை கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சின் மருந்துப் பொருட்கள் தொடர்பான விஷேட குழு அனுமதி வழங்கியுள்ளது.

கடுமையான நோயுடன் அவதிப்படும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு சர்வதேச நாடுகளில் தற்போது இம்மருந்து வழங்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தீவிர சிகிச்சையில் உள்ள வைரஸ் தொற்று நோயாளிகளின் நூற்றுக்கு 81 வீதமான மரணங்களை இதன் மூலம் குறைத்துக்கொள்ள முடியும் என்பதை இம் மருந்து தொடர்பான பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ரெகன் கொவ் என்ற மருந்து தீவிர ஆபத்தான நோயாளிகளுக்கு வழங்கும் போது நூற்றுக்கு 31 வீதம் வெற்றிகரமான தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.

உயிராபத்துமிக்க நோயாளிகளின் மரணங்கள் அம்மருந்து மூலம் 81 வீதம் குறைவடைந்துள்ளதாக பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உட்பட பல நாடுகளுக்கு தற்போது ரெகன் கொவ் மருந்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment