தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மதிக்க வேண்டும் : வடக்கு, கிழக்கு மக்களுக்கு பொலிஸ் பேச்சாளர் விசேட அறிவிப்பு - News View

Breaking

Thursday, September 2, 2021

தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மதிக்க வேண்டும் : வடக்கு, கிழக்கு மக்களுக்கு பொலிஸ் பேச்சாளர் விசேட அறிவிப்பு

வடக்கு, கிழக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையும், கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் பொதுமக்களே, எனவே பொதுமக்கள் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மதிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுமக்களே ஏதேனும் அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டும் வீடுகளிலிருந்து வெளியேறுங்கள். இதன்போது வீதிச் சோதனைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கு நீங்கள் பயணிப்பதற்கான காரணத்தைக் கூற வேண்டியது அவசியம்.

போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி பயணிப்பவர்களும் உள்ளனர். இவ்வாறானவர்களை இனங்காண்பதற்காகப் பொலிஸார் பல கேள்விகளைக் கேட்பர். 

எனவே, அற்கான ஒத்துழைப்பைப் பொலிஸாருக்கு வழங்கிச் செயற்படுமாறு வடக்கு, கிழக்கு மக்களைக் கேட்டுக் கொள்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment